தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்

குடியேற்ற காலத்திலும் விடுதலைக்குப் பின்னரும் இந்திய தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை ஆசிரியர்களின் ஊதியம் பணி நிலைகளில் அலட்சியப் போக்கு காட்டின. இப்பிரச்சனைகளை ஆய்ந்து தீர்ப்பதற்காக அரசு கலை மற்றும் அறிவியல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் புதுக்கோட்டையில் 1971இல் கூடி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தைத் தோற்றுவித்தனர். பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இருந்த இவ்வமைப்பு தமிழ்நாடு அரசால் 1980இல் அங்கீகரிக்கப்பட்டது. ஆசிரியர் கழகத்தின் விரிவாக்க நிலையை தனித்து இயங்கியகாலம் (1971-78)கூட்டு நடவடிக்கைக் குழுக்காலம் (1978-85) கூட்டு இயக்க விரிவாக்கக் காலம் என மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் நிலையில் தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வி நிர்வாகத்தில் ஏற்பட்ட நடைமுறை நெருக்கடிகளை தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அகற்ற முற்பட்டது. இரண்டாம் நிலையில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் தனியார் கல்லூரி ஆசிரியர் சங்கங்களான பல்கலைகழக ஆசிரியர் சங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம் ஆகிய சங்கங்களுடன் இணைந்து போராடி பல்கலைக்கழக மானியக் குழுவின் ஊதியவிகிதங்களை தமிழ்நாட்டுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்குப் பெற்றுத் தந்தது. மூன்றாம் நிலையில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து ஆசிரியர் சமுதாய நிலை மேம்பட பணியாற்றியது.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக அமைப்பு மூன்று அடுக்குகளைக் கொண்டது. ஒரு அரசு கல்லூரி ஆசிரியர் ரூ 5 ஐ ஆண்டு உறுப்பினர் கட்டணமாகச் செலுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் உறுப்பினர் ஆகலாம். உறுப்பினர் கட்டணம் தற்போது ரூ 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிளையும் தம் உறுப்பினர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அடிமட்ட அமைப்பாகச் செயல்படுகிறது.8 மண்டலங்கள் இடைநிலை அமைப்பாகப் பனியாற்றுகின்றன. தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் மேல்முகட்டு அமைப்பு நடைமுறைகளை, ஒரு தலைவர், ஒரு துணைத்தலைவர், ஒரு பொதுசசெயலாளர், ஒரு இணைசசெயலாளர், ஒரு பொருளாளர் போன்றோர்களின் செயலபாட்டினால் மேற்கொள்கின்றது. தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தலைமையகம் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது.

ஊதியம், பணிநிலை, ஆசிரியர் நலம், மட்டுமே தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் குறிக்கோள் அல்ல. அரசு கல்லூரி ஆசிரியர்கள் சமுதாயத்தில் மதிப்பு வாய்ந்த அடையாளத்தைப் பெறுவது நாட்டுப்புறம் சார்ந்த, அடக்கி ஆளப்பட்ட ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதில் ஆக்க முறையான முயற்சி, நகர்புறம் சார்ந்த ஒதுக்கிவிடப்பட்ட மாணவர்களுக்கு உதவுதல், அரசுக்கும், மக்களுக்குமிடையே பாலமாகச் செயலாற்றுதல் போன்றவை தமிழ்நாடு அரசு கல்லுரி ஆசிரியர் கழகத்தின் குறிப்பிடத்தகுந்த பணிகளாகும். தமிழ்நாடு அரசு கல்லுரி ஆசிரியர் கழகம் வன்முறை சார்ந்த அமைப்பு இல்லையெனினும் மக்கள் ஊடகத்தின் துணையோடு பெரிய எண்ணிக்கையுடைய பல போராட்டங்களை நடத்தி உள்ளது. ஆசிரியர்களின் ஊதியம், பணிப்பாதுகாப்பு, பணிநிலை, அமைப்பு சீரமைப்பு நடைமுறை சார்ந்த முயற்சிகளின் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு அரசு கல்லுரி ஆசிரியர் கழகம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. உயர்கல்வித் தொகுதி, தொலைத்துறைக் கல்வி, ஆராய்ச்சிசூழல், ஆராய்ச்சி நிதி, கலந்தாய்வுச் செயல்பாடுகள், உயர் கல்வி விரிவாக்கத் தேவைக்கான பொதுமக்களின் உணர்வு போன்ற வளர்ச்சி செயல்பாடுகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு அரசு கல்லுரி ஆசிரியர் கழகத்தின செம்மையான பணி இங்கு குறிப்பிடத் தகுந்ததாகும்.